சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

பச்சிளம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருள்களில் மாட்டுத் தீவனமா? -எஃப்எஸ்எஸ்ஏஐ நடவடிக்கை

ஆறு மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான உணவில் சேர்க்கப்படும் சர்க்கரைக்குத் தடை விதிக்க எஃப்எஸ்எஸ்ஏஐ பரிந்துரைத்துள்ளது குறித்து...

FSSAI proposes ban on added sugars in infant foods for babies up to six months

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்

Updated On :

பச்சிளம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருள்களில் மாட்டுத் தீவனம் கலந்த மூன்று முன்னணி நிறுவனங்கள் மீது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எஃப்எஸ்எஸ்ஏஐ சட்டப்பூர்வமான நடவடிக்கை தொடங்கியுள்ள நிலையில், ஆறு மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான உணவில் சேர்க்கப்படும் சர்க்கரைக்குத் தடை விதிக்க எஃப்எஸ்எஸ்ஏஐ பரிந்துரைத்துள்ளது.

பாலில் டிடெர்ஜென்ட், பிஸ்கெட்டில் மாட்டுத் தீவனம் கலந்த நிறுவனங்கள் மீது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சட்டபூர்வமான நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

பச்சிளம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருள்களை உற்பத்தி செய்யும் சூரியா ஃபுட் அண்ட் அக்ரோ, டோட்லா டெய்ரி, யுஇஐஆர் ஆர்கானிக் ஃபுட்ஸ் ஆகிய மூன்று முன்னணி நிறுவனங்களும் தரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற உணவுப் பொருள்களைத் தயாரித்தது ஆய்வில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சூரியா ஃபுட் அண்ட் அக்ரோ நிறுவனம், பிஸ்கட்டுகளில் நார்ச்சத்துக்குப் பதிலாக மாட்டுக்குத் தீவனமாக பயன்படுத்தப்படும் தவிடு பயன்படுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பால் மற்றும் பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான டோட்லா டெய்ரி, தனது முழு கொழுப்புள்ள பால் மாதிரியில் டிடெர்ஜென்ட் மற்றும் காஸ்டிக் சோடா கலந்திருப்பதும், பாலில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச கொழுப்புச்சத்து குறைவாக இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று யுஇஐஆர் ஆர்கானிக் ஃபுட்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் மஞ்சள் திராட்சையில் மிக அதிகயளவில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.

இதையடுத்து மூன்று நிறுவனங்கள் மீதும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) சட்டப்பூர்வமான நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், பச்சிளம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துப் பாதுகாப்புகளை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ), ஆறு மாதங்கள் வரையிலான பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் சுக்ரோஸ், ஃபிரக்டோஸ் சேர்ப்பதைத் தடைசெய்யும் வகையில், வரைவுத் திருத்தத்தை வெளியிட்டுள்ளது.

சனிக்கிழை (அக்.17)-ல் அரசிதழில் வெளியிடப்பட்ட வரைவுத் திருத்த ஒழுங்குமுறையில், குழந்தைகளின் ஊட்டச்சத்துப் பொருள்கள், வயதுக்கு ஏற்ற ஊட்டச்சத்துத் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம், தற்போதுள்ள ஒழுங்குமுறைக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

தற்போதுள்ள விதிமுறைகள்படி, பிறப்பு முதல் 24 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான பல்வேறு வகை குழந்தை ஊட்டச்சத்துப் பொருள்களுக்கு, விரிவான ஊட்டச்சத்துக் கலவை, தரம், பாதுகாப்புத் தரநிலைகள் விதிக்கப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆறு மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் தயாரிப்புகளில் சுக்ரோஸ், ஃபிரக்டோஸ் சேர்ப்பதற்கு தடை விதிக்க முன்மொழிந்துள்ளது. இதன் நோக்கம், வாழ்க்கையின் ஆரம்பத்தில் அதிகப்படியான சர்க்கரை உள்கொள்வது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்களைக் குறைப்பதாகும்.

உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் உடல் பருமன் குறித்த அதிகரித்து வரும் கவலைகளைக் கையாள்வதற்கும் அரசு அதிகாரிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வரும் வேளையில் இந்த முன்மொழிவு வந்துள்ளது.

அரசாங்கம், பொட்டலமிடப்பட்ட உணவுகளின் முன்பக்கத்தில் கடுமையான எச்சரிக்கை லேபிள்களைப் பொருத்துவது குறித்தும் பரிசீலித்து வருகிறது. இந்த நடவடிக்கை, இந்தியாவின் பெரிய உணவுத் தொழிலுக்குக் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

இந்த வரைவு அறிவிப்பு மக்களின் கருத்துக்கேட்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. 60 நாள்களுக்குள் பெறப்படும் கருத்துகள், திருத்தத்தை இறுதி செய்வதற்கு முன்னர் பரிசீலிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

சுகாதார நிபுணர்களும் பொது சுகாதார ஆர்வலர்களும், குழந்தைகள் உள்பட இந்தியர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் விகிதங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.

தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2021-இல் இந்தியாவில் சுமார் 18 கோடி பேர் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக இருந்தனர். அதன் கணிப்புகளின்படி, இந்த எண்ணிக்கை 2050-இல் 45 கோடியாக உயரக்கூடும் என தரவுகள் தெரிவிக்கின்றன.

உணவுப் பழக்கத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியமற்ற உணவுகளின் நுகர்வைக் குறைக்கவும் வலுவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தரவுகள் வலியுறுத்தியுள்ளன.

FSSAI Moves to Strengthen Infant Nutrition Standards by Restricting Addition of Sucrose and Fructose in Products for Infants Up to Six Months

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.