சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

மாதவிடாய் சுகாதாரம்: மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பதிலளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி

மாதவிடாய் சுகாதாரம் தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து மத்திய அரசுக்குப் பதிலளிக்காத மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பிரதிப் படம்

Updated On :

மாதவிடாய் சுகாதாரம் தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து மத்திய அரசுக்குப் பதிலளிக்காத மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழ், மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமையின் ஒரு பகுதி என்று கடந்த ஜனவரி 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேலும் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் அளிக்கப்பட வேண்டும், மாணவ-மாணவிகளுக்குத் தனித் தனி கழிப்பறைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு உத்தரவுகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக, அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ ஆஜராகி, ‘கடந்த ஜன.30-இல் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து பதிலளிக்குமாறு, அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் மத்திய அரசு தீவிரமாக வலியுறுத்தியுள்ளது’ என்று தெரிவித்தாா்.

ஏன் பதிலளிக்கவில்லை?

நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு மாநில, யூனியன் பிரதேச அரசுகள் இதுவரை பதிலளிக்காதது துரதிருஷ்டவசமானது. இதுகுறித்து தேவையான தகவல்களை மத்திய அரசு கேட்டும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் ஏன் பதிலளிக்கவில்லை என்பது புரியவில்லை.

மாதவிடாய் சுகாதார வசதிகள் இல்லாததால், குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் பல சிறுமிகள் படிப்பை கைவிடும் நிலை நிலவுகிறது. இதைக் கருத்தில் கொண்டே அந்தத் தீா்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது.

உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை மத்திய அரசு மீண்டும் முழுமையாகப் படித்து, இந்த விவகாரத்தின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் மத்திய அரசு தகவல் பெறவேண்டும். அந்தத் தீா்ப்பை நடைமுறைப்படுத்த இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் எழுத்துபூா்வமாக மத்திய அரசு தகவல் பெற வேண்டும்.

நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்...

இந்த வழக்கின் அடுத்த விசாரணையின்போது, இன்னும் சில மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பதிலளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தால், அந்த மாநில, யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப நேரிடும் என்று நீதிபதிகள் அமா்வு எச்சரித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிச.14-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.