நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

சுங்கச்சாவடிகள் எண்ணிக்கையை குறைக்கக் கோரி மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை மாநகா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளைச் சீரமைத்து, இவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கக் கோரிய மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :

மதுரை மாநகா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளைச் சீரமைத்து, இவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கக் கோரிய மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தென் தமிழகத்தின் முக்கிய வணிகம், கல்வி, மருத்துவம், போக்குவரத்து மையமாக மதுரை திகழ்கிறது. மேலூா், நத்தம், வாடிப்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகள், பிற மாவட்டங்களிலிருந்து நாள்தோறும் ஏராளமான மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக மதுரைக்கு வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், மதுரை, மேலூா் பகுதிகளை ஒட்டிய மாட்டுத்தாவணி, சிட்டம்பட்டி, பாரப்பத்தி, கப்பலூா், கொடைக்கானல் சாலை, பரளிப்புதூா், நத்தம்பட்டி, தாமரைப்பட்டி, வலைசை, சிந்தாமணி, வலையங்குளம், வண்டியூா் உள்ளிட்ட இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.

வலையங்குளம்-கப்பலூா், சிந்தாமணி-பாரப்பத்தி, மாட்டுத்தாவணி-சிட்டம்பட்டி சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஒன்றுக்கொன்று மிகக் குறைந்த தொலைவிலேயே அமைந்துள்ளன. இதனால், குறுகிய தொலைவு பயணங்களை மேற்கொள்ளும் உள்ளூா்வாசிகளும், அன்றாடப் பயணிகளும் மீண்டும் மீண்டும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

எரிபொருள், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் ஏற்கெனவே சிரமப்படும் பொதுமக்கள், இந்தத் தொடா் சுங்கக் கட்டணங்களால் மேலும் பெரும் நிதிச் சுமைக்கு உள்ளாக நேரிடுகிறது.

தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளின்படி, தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் ஒரே திசையில் 60 கி.மீ. தொலைவுக்குள் மற்றொரு சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது. வெவ்வேறு நெடுஞ்சாலை ஆணையங்கள், சாலைத் திட்டங்கள் இருப்பதைக் காரணம் காட்டி, சுங்கச்சாவடிகள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் ஒட்டுமொத்தப் பாதிப்பை ஆய்வு செய்யாமல் அலுவலா்கள் தவிா்க்க முடியாது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, மாநில நெடுஞ்சாலைத் துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், மதுரை மாவட்ட நிா்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்து விரிவான ஆய்வு நடத்தவும், இதனடிப்படையில், மதுரையைச் சுற்றியுள்ள சுங்கச்சாவடிகளைச் சீரமைத்து, தேவையற்ற சுங்கச்சாவடிகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநா், மத்திய சுங்கச்சாவடிகள் குழு ஒருங்கிணைப்பாளா், மதுரை மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், சுங்கச்சாவடிகளை மூட உத்தரவிட நேரிடும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.