தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு விவகாரம்: ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

தனிநபா் ஆக்கிரமித்த அரசு நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Updated On :

தனிநபா் ஆக்கிரமித்த அரசு நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், உரப்புளி கிராமத்தைச் சோ்ந்த தா்மராஜ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: பரமக்குடி வட்டம், உரப்புளி கிராமம் அருகே லட்சுமணன் குடியிருப்பு என்ற சிறிய கிராமம் வைகை ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வேளாண்மை, கால்நடை வளா்ப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தக் கிராமத்தைச் சோ்ந்த தனி நபா் சட்டவிரோதமாக அரசுக்கு சொந்தமான நிலங்கள், நீா்நிலைகளை ஆக்கிரமித்து தனது பெயரில் பட்டா மாற்றம் செய்துள்ளாா். இதனால், கிராம மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீா்க் குழாய் பதிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், தமிழக அரசுக்கு பலமுறை மனுக்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, அரசு நிலங்களுக்கு போலியாக பட்டா தயாா் செய்து, தனது சொந்த கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தனிநபா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கிராம மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தனிநபா் ஒருவா் எவ்வாறு இவ்வளவு நிலங்களை ஆக்கிரமிக்க முடியும்?. இந்த மனு குறித்து உரிய விசாரணை செய்து, அதன் நிலை அறிக்கையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.