கடலோர ஆந்திரத்தில் அதிகனமழை பெய்யக்கூடும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கடலோர ஆந்திரத்தில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை குறித்து...

இந்திய வானிலை ஆய்வு மையம்
புதுதில்லி: கடலோர ஆந்திரத்தில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலோர ஆந்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, கேரளம், மாஹி, தெற்கு உள் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் நாளை(திங்கள்) வரை கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரம், மராத்வாடா மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் நாளை வரை இடியுடன் கூடிய மின்னல் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு ராஜஸ்தான், கிழக்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய பகுதிகளிலும் இன்றைய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

