சிஜேபி தலைவர்களின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிப்பு!ஆசிய பாரா விளையாட்டு: 4 தங்கம் வென்று 4-வது இடத்தில் இந்தியா!தனியார் வங்கி பங்கு சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 876 புள்ளிகளுடனும், நிஃப்டி 22,900க்கு கீழே சரிவு!!டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 94.92 ஆக நிறைவு!சென்னை வெள்ளத்தடுப்பு அறிக்கையை தாமதமின்றி வெளியிடுக! - தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!உலக ஸ்கேட்டிங் போட்டி: பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!ஆசிய பாரா விளையாட்டு: நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நிஷாத் குமார்!மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்ஆசிய பாரா விளையாட்டு: புதிய சாதனையுடன் முதல் தங்கம் வென்ற இந்தியா!7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

சிஜேபி தலைவர்களின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிப்பு!

சிஜேபி தலைவர்களான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா இருவரின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து...

CJP leaders Saurav Das and Ashutosh Ranga.

சிஜேபி தலைவர்களான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா. - படம் - பிடிஐ

Updated On :

சிஜேபி தலைவர்களான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா இருவரின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாள்களுக்கு திங்கள்கிழமை (அக். 19) நீட்டிக்கப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் அவர் பதவி விலகக் கோரியும் நாடு முழுவதும் போராட்டம் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது.

தில்லியில் வழக்கமாக போராட்டங்கள் நடைபெறும் ஜந்தர் மந்தரில் போராட மத்திய அரசு தடை விதித்து, ஜந்தர் மந்தர் இனி போராடுவதற்கான இடமில்லை என்று அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, அக். 13 ஆம் தேதி ஜந்தர் மந்தருக்குள் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா இருவரும் தில்லி நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா இருவரையும் ஐந்து நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த ஐந்து நாள் நீதிமன்றக் காவல் முடிவடையும் நிலையில், அவர்கள் இருவருக்கும் மேலும் இரண்டு நாள்கள் நீட்டிக்கப்பட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நீதிமன்ற நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தவும் அசுதோஷ் மற்றும் சௌரவின் விடுதலையைத் தடுக்கவும் அரசு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அபிஜீத் தீப்கே குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The judicial custody of CJP leaders Saurav Das and Ashutosh Ranga was extended for another 2 days on Monday (Oct. 19).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.