நீதிமன்றக் காவலில் இருந்த சிஜேபி தலைவர்கள் அசுதோஷ், சௌரவ் விடுதலை!
நீதிமன்றக் காவலில் இருந்த சிஜேபி தலைவர்கள் அசுதோஷ், சௌரவ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து...

சிஜேபி தலைவர்கள் அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ். - படம் - பிடிஐ
நீதிமன்றக் காவலில் இருந்த சிஜேபி தலைவர்கள் அசுதோஷ், சௌரவ் ஆகியோர் புதன்கிழமை (அக். 21) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கும் ஜந்தர் மந்தருக்குள் அத்து மீறி நுழைந்த விவகாரத்தில் சிஜேபி தலைவர்கள் அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகியோர் கைது அக். 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், அக். 19 ஆம் தேதி அது நிறைவடைந்தது. இதையடுத்து, அவர்களின் நீதிமன்றக் காவல் மேலும், 2 நாள்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அக். 19 ஆம் தேதி சிறப்பு நிர்வாக மஜிஸ்திரேட் உத்தவிட்டார்.
நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டதற்கு எதிராக அசுதோஷ், சௌரவ் ஆகியோர் தில்லி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 20) அவசர மனு தாக்கல் செய்தனர். அதை இன்று விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் மனுவில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி, அதனை நிராகரித்தார். ஆகையால், அந்த மனு திரும்பப் பெறப்பட்டது.
நீட்டிக்கப்பட்ட 2 நாள் நீதிமன்றக் காவல் முடிவடையும் நிலையில், மீண்டும் சிறப்பு நிர்வாக மஜிஸ்திரேட் முன்னிலையில் அசுதோஷ், சௌரவ் இருவரும் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், அவர்கள் இருவரையும் விடுதலை செய்வதாக சிறப்பு நிர்வாக மஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
Summary
CJP leaders Ashutosh and Saurav, who were in judicial custody, were released on Wednesday (Oct. 21).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


