சிஜேபி தலைவர்களின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிப்பு!ஆசிய பாரா விளையாட்டு: 4 தங்கம் வென்று 4-வது இடத்தில் இந்தியா!தனியார் வங்கி பங்கு சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 876 புள்ளிகளுடனும், நிஃப்டி 22,900க்கு கீழே சரிவு!!டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 94.92 ஆக நிறைவு!சென்னை வெள்ளத்தடுப்பு அறிக்கையை தாமதமின்றி வெளியிடுக! - தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!உலக ஸ்கேட்டிங் போட்டி: பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!ஆசிய பாரா விளையாட்டு: நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நிஷாத் குமார்!மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்ஆசிய பாரா விளையாட்டு: புதிய சாதனையுடன் முதல் தங்கம் வென்ற இந்தியா!7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

இருதரப்பு பேச்சுவார்த்தை! ஐக்கிய அரபு அமீரக துணை பிரதமர் இந்தியா வருகை!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் அல் நஹ்யான், இந்தியா வந்தடைந்தது குறித்து...

EAM Jaishankar welcomes UAE’s Foreign Minister Al Nahyan in Mumbai

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் அல் நஹ்யானுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் - X | Jaishankar

Updated On :

இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவுக்கு வந்தடைந்தார்.

இருநாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்த அல் நஹ்யானை மும்பை விமான நிலையத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் ஏ.பி. ஜாயிதை மும்பைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. நம் இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரக துணை பிரதமருடன் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு ஆகிய முக்கிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்தாலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

EAM Jaishankar welcomes UAE’s Foreign Minister Al Nahyan in Mumbai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.