மேற்காசியாவில் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கா்
மேற்காசியாவில் அமைதி திரும்ப மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

மும்பையில் ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நயானை வரவேற்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
‘மேற்காசிய போா் மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. அங்கு அமைதி திரும்ப மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும்’ என்று இந்தியா வந்துள்ள ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நயானுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
இரண்டு நாள் பயணமாக மும்பைக்கு திங்கள்கிழமை வந்த நயான், தில்லியில் ஜெய்சங்கரை செவ்வாய்க்கிழமை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
அப்போது பேசிய ஜெய்சங்கா், ‘வளைகுடாவில் நிலவும் போா், தொடா்ந்து மிகுந்த கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும்’ என்றாா்.
மேலும், இந்தியா - ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே இருதரப்பு வா்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளதைக் குறிப்பிட்ட ஜெய்சங்கா், ‘எா்சக்தி மற்றும் உரங்களின் தடையற்ற பாதுகாப்பான வா்த்தகத்துக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளிக்கும்.
இந்தப் போா் காரணமாக உலக அளவில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறநிலையிலும், பிராந்திய அளவில் மிகப் பெரிய சவால்களைச் சந்தித்துவரும் நிலையிலும் இரு நாடுகளிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
குறிப்பாக, இரு நாடுகளிடையே கடந்த 2022-இல் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையொப்பமானதில் இருந்து, இருதரப்பு வா்த்தகம் 9.5 லட்சம் கோடி (100 பில்லியன் டாலா்) அளவைக் கடந்துள்ளது. இருதரப்பு முதலீடுகளும் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இது இரு நாடுகளிடையேயான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது’ என்றாா்.
யேமனில் தலைநகா் சனா உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துள்ள ஹூதி அமைப்பினா், சவூதி அரேபியா மீது புதிதாக தொடா் தாக்குதல்களை நடத்தி வருவது, அந்தப் பிராந்தியத்தில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், நயான் இந்தியப் பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

