சிஜேபி தலைவர்களின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிப்பு!ஆசிய பாரா விளையாட்டு: 4 தங்கம் வென்று 4-வது இடத்தில் இந்தியா!தனியார் வங்கி பங்கு சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 876 புள்ளிகளுடனும், நிஃப்டி 22,900க்கு கீழே சரிவு!!டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 94.92 ஆக நிறைவு!சென்னை வெள்ளத்தடுப்பு அறிக்கையை தாமதமின்றி வெளியிடுக! - தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!உலக ஸ்கேட்டிங் போட்டி: பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!ஆசிய பாரா விளையாட்டு: நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நிஷாத் குமார்!மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்ஆசிய பாரா விளையாட்டு: புதிய சாதனையுடன் முதல் தங்கம் வென்ற இந்தியா!7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

ரூபாய் மதிப்பு தொடர் சரிவு! தள்ளிப்போகும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு!

இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு தள்ளிப்போவது குறித்து...

India's $5 trillion economic target likely to be delayed

தள்ளிப்போகும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு! - பிரதிப் படம்

Updated On :

இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

2028 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர்த்தப்படும் என மத்திய அரசு கணித்திருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக தொடர்ந்து சரிந்து வருவதால், 5 டிரில்லியன் டாலர் இலக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 93.3 ஆக இருந்த நிலையில், இன்று (அக். 19) ரூ. 94.92 என்ற நிலையில் சரிந்துள்ளது. நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து ரூபாயின் மதிப்பு 5 சதவிகிதத்துக்கும் மேல் சரிவைக் கண்டுள்ளது.

மேலும், 2028 ஆம் ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சராசரியாக 95.5 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும்நிலையில், இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு தள்ளிப்போகும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பின்படி, இந்தியா 2026-ல் 4.06 டிரில்லியன் டாலராகவும், 2027-ல் 4.52 டிரில்லியன் டாலராகவும், 2029-ல் 5.54 டிரில்லியன் டாலராகவும் உயரும் என தெரிவித்துள்ளது. ஆனால், 2028 ஆம் ஆண்டிலேயே இந்தியா 5 டிரில்லியன் டாலர் இலக்கை எட்டி விடும் என மத்திய அரசு கணித்திருந்தது.

Summary

India's $5 trillion economic target likely to be delayed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.