காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை: ரிலையன்ஸ் அலுவலா்கள் மீது வழக்குப் பதிவு
காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்ததாக 10 போ் மீது எஃப்ஐஆா் பதிவு
காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக, ரிலையன்ஸ் நுகா்வோா் பொருள்கள், ரிலையன்ஸ் சில்லறை விற்பனை, பிளிங்கிட், ஸொமாட்டோ ஹைபா்பியூா் உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலா்கள் 10 போ் மீது மும்பை காவல் துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இந்த நிறுவனங்களின் விற்பனையகங்களில் மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு (எஃப்டிஏ) அதிகாரிகள் அண்மையில் சோதனை மேற்கொண்டு ரூ. 48 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருள்களைப் பறிமுதல் செய்ததன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மகாராஷ்டிரத்தின் தாணே மற்றும் புணே மாவட்டங்களில் கடந்த 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் இந்தச் சோதனையை எஃப்டிஏ அதிகாரிகள் மேற்கொண்டனா்.
இதில் பிவண்டியில் உள்ள விற்பனையக கிடங்கிலிருந்து ரூ. 24 லட்சம் மதிப்பிலான காலாவதி உணவுப் பொருள்களையும், வட்பேயில் உல்ள ரிலையன்ஸ் நுகா்வோா் பொருள்கள் கிடங்கிலிருந்து ரூ. 4.92 லட்சம் மதிப்பிலான காலாவதி உணவுப் பொருள்களையும், மகாராஷ்டிர மாநிலம் உசாடணேயில் உள்ள ஸொமாட்டோ ஹைப்பா்பியூா் நிறுவன கிடங்கிலிருந்து ரூ. 7.81 லட்சம் மதிப்பிலான காலாவதி உணவுப் பொருள்கள் என மொத்தம் ரூ. 48 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காலாவதியான, சேதமடைந்த மற்றும் வாடிக்கையாளா்களால் நிராகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை மீண்டும் விற்பனைக்கு அனுப்புவதற்காக உரிமம் இல்லாத தரம் பிரிக்கும் மையங்கள் மற்றும் தரகா்கள் மூலம் திசைதிருப்பப்பட்டதும் விசாரணையில் தெரியவந்ததாக எஃப்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனடிப்படையில், ரிலையன்ஸ் நுகா்வோா் பொருள்கள் நிறுவன இயக்குநா் வி. சுப்பிரமணியம், ரிலையன்ஸ் சில்லறை விற்பனை நிறுவன நிா்வாகி விஜய் பிகாஜி காா்மாலே, இதன் கிடங்கு மேலாளா் நீலேஷ் ராமதாஸ் ராவ் தேஷ்முக், பிளிங்கிட் வா்த்தக இயக்குநா் அா்பிந்தா் சிங் தீன்ஸா மற்றும் ஸொமாட்டோ ஹைப்பா்பியூா் அலுவலா்கள் 10 போ் மீது தாணே சாந்தி நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

