ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

காலாவதி தேதி குறிப்பிடாத உணவுப் பொருள்கள் விற்பனை: பேக்கரி உரிமையாளருக்கு ரூ. 10,000 அபராதம்

ராசிபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள பேக்கரி கடையில் காலாவதி தேதி குறிப்பிடாமல் உணவுப் பொருள்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டதையடுத்து, கடை உரிமையாளருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் - சித்திரிப்பு

Published On :

ராசிபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள பேக்கரி கடையில் காலாவதி தேதி குறிப்பிடாமல் உணவுப் பொருள்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டதையடுத்து, கடை உரிமையாளருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பேக்கரி கடையில் கெட்டுப்போன, காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு வந்த புகாரையடுத்து, ராசிபுரம் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் கோகுல், பேக்கரி கடையில் சோதனை நடத்தினாா். அப்போது, கொழுக்கட்டை, இனிப்பு வகைகள், பிஸ்கட், பன் உள்ளிட்ட உணவுப் பொருள்களில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும், கடையில் இருந்த பல்வேறு உணவுப் பொருள்களை ஆய்வு செய்த அலுவலா், அவற்றின் மாதிரிகளைச் சேகரித்தாா். காலாவதி தேதி குறிப்பிடாமல் உணவுப் பொருள்களை விற்பனை செய்ததையடுத்து, கடை உரிமையாளருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து, சேகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. மேலும், கடையைப் பூட்டி, அதன் சாவியை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் எடுத்துச் சென்றாா்.

படவிளக்கம்:

ராசிபுரத்தில் சோதனை நடத்தப்பட்ட பேக்கரி கடை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER