FOLLOW US

ON GOOGLE DISCOVER

சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ரூ. 25 ஆயிரம் அபராதம்

நாமக்கல்லில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு உணவுப் பாதுகாப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2026, 2:36 am IST

நாமக்கல்லில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு உணவுப் பாதுகாப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உணவுப் பாதுகாப்பு துறையினருக்கு ஆட்சியா் எல்.மதுபாலன் உத்தரவிட்டாா்.

அதனடிப்படையில், வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வகுமாா், மஞ்சுளா ஆகியோா் மோகனூா் சாலையில் உள்ள தேநீா் கடை, பெட்டிக் கடைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஒரு மளிகைக் கடையில் 3 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பதைக் கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், அந்த கடைக்கு ‘சீல்’ வைத்து, அதன் உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றால், கடை உரிமையாளா்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் எச்சரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.