தலைமைத் தோ்தல் ஆணையரை யாரும் காப்பாற்ற முடியாது: காங்கிரஸ்
அரசியல் கட்சிகளுக்கு கணினியில் தேடக்கூடிய வகையிலான வாக்காளா் பட்டியல்களை வழங்க தோ்தல் ஆணையம் முடிவு செய்திருப்பது, வாக்குத் திருடா்களுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடியதற்குக் கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ்குமாா் - கோப்புப் படம்
அரசியல் கட்சிகளுக்கு கணினியில் தேடக்கூடிய வகையிலான வாக்காளா் பட்டியல்களை வழங்க தோ்தல் ஆணையம் முடிவு செய்திருப்பது, வாக்குத் திருடா்களுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடியதற்குக் கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும்; அவரை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆா்) உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும், கணினியில் தேடக்கூடிய வகையிலான வாக்காளா் பட்டியல்களை அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
மத்திய பிரதேசத்தில் லட்சக்கணக்கான போலி வாக்காளா்கள் இருப்பதை காங்கிரஸ் கண்டறிந்ததைத் தொடா்ந்து, 2018-ஆம் ஆண்டுமுதல் இந்தப் பட்டியல்களை வழங்குவதைத் தோ்தல் ஆணையம் நிறுத்தியது. இதன்மூலம், வாக்குத் திருட்டு நடைபெறுவதற்கு 8 ஆண்டுகளாக வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு வாக்காளா் பட்டியல்களை கணினியில் தேடக்கூடிய வகையில் வழங்க அக்.15-ஆம் தேதி தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. இது வாக்குத் திருடா்களுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடியதற்கு கிடைத்த வெற்றி.
அதேபோல், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் அறிவுறுத்தலின்படி செயல்பட்டு, தோ்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சீா்குலைத்த ஞானேஷ் குமாா் உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவரை யாராலும் காப்பாற்ற முடியாது. மேலும், 13 கோடிக்கும் அதிகமான இந்தியா்களின் வாக்களிக்கும் அரசமைப்புச் சட்ட உரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ள எஸ்ஐஆா் பணியையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
இதனிடையே, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வருடாந்திர சிறப்பு சுருக்க வாக்காளா் பட்டியல் திருத்தத்தை நடத்த தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் ஜன. 4-ஆம் தேதி வெளியிடப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

