தோட்டாக்களுக்குத் தோட்டாக்களால் பதிலடி கொடுக்கப்படும்: மகாராஷ்டிர துணை முதல்வர் ஷிண்டே
நடிகர் டைகர் ஷ்ராஃபின் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து துணை முதல்வர் ஷிண்டே பதில்....

துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃபின் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, தோட்டாக்களுக்குத் தோட்டாக்களால் பதிலடி கொடுக்கப்படும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் ஜூஹு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃபின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். நடிகர் காயமின்றித் தப்பிய நிலையில், அவரது ஓட்டுநர் மற்றும் மற்றொரு நபர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளதாக சமூக ஊடகப் பதிவு ஒன்று வைரலாகியுள்ளது. ஆனால், அதன் நம்பகத்தன்மையைக் காவல் துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள டைகர் ஷ்ராஃபின் இல்லத்திற்கு நேற்று சென்ற துணை முதல்வர் ஷிண்டே, நடிகரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், கவலையில் இருந்த அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்ததுடன், துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "தோட்டாக்களுக்குத் தோட்டாக்களால் பதிலடி கொடுக்கப்படும். மும்பையில் நடக்கும் கும்பல் மோதல்களை அரசு பொறுத்துக்கொள்ளாது" என்று தெரிவித்தார்.
Summary
In the wake of firing at Bollywood actor Tiger Shroff's car, Maharashtra Deputy Chief Minister Eknath Shinde has said "bullets would be answered with bullets" and warned that the government would not tolerate gang wars in Mumbai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


