சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(அக்.21) விடுமுறை தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்: இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கைஅரசு மருத்துவமனையில் தடையற்ற சேவைகள்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அருண்ராஜ் உத்தரவுஇந்தியா, லத்தீன் அமெரிக்காவுடன் புதிய கூட்டணி: இஸ்ரேல் பிரதமர்

‘ஜங்க்’ உணவு விதிகள்: மத்திய அரசிடம் விளக்கம் கேட்க கேரள அரசு முடிவு

சா்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை (ஜங்க் உணவுகள்) ஒழுங்குபடுத்தும் விதிகள் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

‘Junk’ food

‘ஜங்க்’ உணவு - பிரதிப் படம்

Updated On :

சா்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை (ஜங்க் உணவுகள்) ஒழுங்குபடுத்தும் விதிகள் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் இந்திய தரநிா்ணய ஆணையத்துக்கு (எஃப்எஸ்எஸ்ஏஐ) கடிதம் எழுதவுள்ளதாக மாநில சுகாதார அமைச்சா் கே.முரளீதரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஜங்க் உணவுகள் குறித்து தெளிவான அறிவியல்பூா்வ வரையறை இல்லாததால் அந்த வகைப்பாட்டில் எந்தெந்த உணவுகளைச் சோ்ப்பது, விற்பனைக்குத் தடை அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

குறிப்பாக, பள்ளிகளுக்கு அருகே விற்பனை செய்ய தகுதியான உணவுப் பொருள்களின் பட்டியலை தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, ஜங்க் உணவுப் பொருள்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை விரைவாக இறுதி செய்து அவற்றை சட்ட வரையறைக்குள் கொண்டு வர வேண்டும்.

ஆரோக்கியமற்ற உணவுப் பொருள்களை உண்ணும் பழக்கத்தை குழந்தைகளிடம் தடுக்க ‘சரியான உணவை உண்ணுதல்’, ‘பள்ளியில் பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு’, பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் நடத்தப்படும் உணவகங்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. உணவுத் தரநிா்ணய விதிகளை மீறும் உணவகங்கள் மீது மாநில அரசு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.