
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்! மத்திய அரசின் அனுமதியைக் கோரும் தமிழகம்!
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசிடம் மாநில அரசு அனுமதி கோரவுள்ளது குறித்து...

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில்... - கோப்புப் படம்
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கோருவதற்குத் தமிழக அரசு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் தென்னிந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. அங்குள்ள ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை மற்றும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடம் ஆகியவற்றுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
ராமேஸ்வரத்துக்கு சாலை வழியாகவோ அல்லது ரயில் மூலமாகவும் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும் என்பதால் அங்கு புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கடந்த 2025 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, புதிய விமான நிலையம் அமைக்க ராமநாதபுர மாவட்டத்தின் தேவிப்பட்டினம், மாணிக்கனேரி உள்ளிட்ட 5 இடங்கள் முதற்கட்டமாகப் பரிந்துரைக்கப்பட்டன.
பின்னர், இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் மாணிக்கனேரியில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாணிக்கனேரியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் அனுமதி பெறுவதற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தவெக தலைமையிலான தமிழக அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Tamil Nadu government is preparing to seek permission from the Central Government to establish a new airport in Rameswaram.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





