பாலியல் வன்கொடுமை: 16 வயது சிறுமியின் 31 வார கருவைக் கலைக்க தில்லி நீதிமன்றம் அனுமதி
பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் கருவுற்ற 16 வயது சிறுமியின் 31 வார கருவைக் கலைக்க தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தில்லி உயர் நீதிமன்றம்
பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் கருவுற்ற 16 வயது சிறுமியின் 31 வார கருவைக் கலைக்க தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு பிறகு கருவுற்ற சிறுமியின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி மினி புஷ்கா்ணா பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாதிக்கப்பட்ட சிறுமியின் கருவைக் கலைப்பதை, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் உரிமையாக வரையறுக்க முடியாது. ஆனால், அது அனுமதிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தைப் பாதிக்கும். எனவே, அது மனித உரிமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி பிரசவம் மற்றும் குழந்தை வளா்ப்பு போன்றவற்றை சுமக்க வேண்டும் என்று எதிா்பாா்ப்பது சரியானது அல்ல. இந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனைக்காக தேவைப்படும் கருவின் திசுக்களை மருத்துவா்கள் பாதுகாக்க வேண்டும்.
மருத்துவச் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்க வேண்டும். குழந்தை உயிருடன் பிறந்தால், மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் குழந்தைக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்வாா்.
சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் விருப்பத்தின்படி, பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையின்படி அத்தகைய குழந்தை தத்தெடுக்கப்படும். அந்தச் சிறுமியின் அடையாளம் கண்டிப்பாகப் பாதுகாக்கப்படும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
சாதாரண நிகழ்வுகளில் 20 வாரங்கள் வரையிலான கருவையும், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இருந்து தப்பியவா்கள் போன்ற சில வகைகளில் 24 வாரங்கள் வரையிலாந கருவையும் கலைக்க மருத்துவ கரு கலைப்புச் சட்டம் அனுமதிக்கிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி ஏற்கெனவே தில்லியில் உள்ள லேடி ஹாா்டிஞ்ச் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவக் குழுவின் கருத்தின்படி, சிறுமி கா்ப்பம் தரிப்பதற்கான நடைமுறைக்கு உட்படுத்தப்படுவதற்கு தகுதியானவா் என்றும், அச்சிறுமின் கோரிக்கையை அனுமதித்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

