திருப்பதி வரலாற்றில் முதல்முறை! 121 கிலோ தங்க நகை! காணிக்கை செலுத்திய சென்னை பக்தர்!கணவர், மகனுக்கு ஸ்லோ பாய்ஸன்! பெண்ணைக் காட்டிக்கொடுத்த ஈயம்! பின்னணி என்ன?வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? அறிவது அவசியம்!திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம் - முதல்வர் விஜய்ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு: கே.என். நேரு சகோதரரின் உதவியாளர் கைது!மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடரும்! மு.க. ஸ்டாலின்சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: டிச. 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!

ஏற்காடு மலைப்பாதையில் 15 வயது சிறுமி உடல்! கொலையா?

ஏற்காடு மலைப்பாதையில் 15 வயது சிறுமி உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில் தீவிர விசாரணை

ஏற்காடு மலைப்பாதை - பிரதி படம்

ஏற்காடு மலைப்பாதை - பிரதி படம் - கோப்பிலிருந்து..

Updated On :

சேலத்தில் இருந்து குப்பனூர் வழியே ஏற்காட்டிற்கு செல்லும் மலைப்பாதையில் குப்பனூர் அருகே 6 அடி ஆழ பள்ளத்தில் 15 வயது சிறுமி சடலமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுமியின் சடலத்தை ஏற்காடு காவல் நிலைய போலீசார் கைப்பற்றி சிறுமி கொலை செய்யப்பட்டு சடலமாக வீசப்பட்டாரா? அல்லது வேறு காரணமா ? என விசாரணை நடக்கிறது.

ஏற்காட்டில் இருந்து குப்பனூர் வழியாக சேலம் செல்லும் மலைப்பாதை வனப்பகுதியில் இன்று காலை ஒரு சிறுமியின் உடல் கிடப்பதாக ஏற்காடு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் 30 அடி பள்ளத்தில் புதர்களுக்குள் வீசப்பட்டிருந்த சிறுமியின் உடலை மீட்டனர்.

மீட்டக்கப்பட்ட சிறுமியின் உடலை உடற் கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமணைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி யார், எந்த ஊர், கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர்.

இதையடுத்து அதிவிரைவு படையினருடன் சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.