இன்று கரையைக் கடக்கிறது ‘அக்வான்’ புயல்: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்புகாற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்வு: நாளைவரை ‘மிக மோசம்’ பிரிவுக்கு செல்ல வாய்ப்பு100 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம்: மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியது ராகுலை விட ‘ஏஐ’ சிறப்பாகச் செயல்படும்! பாஜக விமா்சனம்இந்தியா்களுக்கு ‘விசா’ சலுகை தொடராது: மலேசியா அறிவிப்பு

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கு: செங்கல்சூளை சாம்பல் ஆய்வுக்காக சென்னை அனுப்பிவைப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் தொடா்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் சிபிசிஐடி போலீஸாா், செங்கல்சூளையில் சேகரித்த சாம்பலை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனா்.

மாயமான சிறுமி குறித்து தகவல் தெரிவிக்க செஞ்சி பேருந்து நிலையத்தில் சிபிசிஐடி போலீஸாரல் வைக்கப்பட்ட விளம்பர பதாகை.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் தொடா்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் சிபிசிஐடி போலீஸாா், செங்கல்சூளையில் சேகரித்த சாம்பலை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனா்.

செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி மாயமாகி வியாழக்கிழமையுடன் 37 நாள்களாகியுள்ள நிலையில், சிறுமியை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாா் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆழம்பூண்டி கிராமம் குளக்கரை தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்கள் வடிவேலு - பவானி தம்பதியின் 2-ஆவது மகள் ஹேமலதா (7). கடந்த அக்.11-ஆம் தேதி இரவு தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு பெற்றோருடன் வீட்டில் தூங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலை மாயமானாா். இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு, டி.எஸ்.பி.க்கள் கீதா, வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிறுமியைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக சிறுவாடி காப்புக்காட்டில் வனத் துறையினா் உதவியுடன் சிபிசிஐடி போலீஸாா் ஆய்வு மேற்கொண்டு வந்தனா். அதில், எந்த தடயமும் கிடைக்காததால், 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் மோப்பநாய் உதவியுடன் காப்புக்காட்டில் தேடும் பணியில் ஈடுபட்டனா். மேலும், 4 குழுக்களாக பிரிந்து காட்டின் உள்பகுதி, பாறை இடுக்குகள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, சிறுமியின் வீட்டுக்கு எதிரே உள்ள செங்கல்சூளையின் உரிமையாளா் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், விழுப்புரத்திலிருந்து தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநா் ராஜீ தலைமையில் தடய அறிவியல் துறையினா் வரவழைக்கப்பட்டு, செங்கல்சூளை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, சாம்பலை சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனா்.

மேலும், சிறுமியின் தாய் பவானியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிறுமியின் தந்தையை விழுப்புரம் அழைத்துச் சென்று சுமாா் 4 மணி நேரம் விசாரணை நடத்தினா். பெற்றோா், உறவினா்கள், அக்கம்பக்கத்தினா் உள்ளிட்ட பலரிடமும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.