செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு : டிஐஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம்
செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த 7 வயது சிறுமி மாயமான வழக்கில் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரிகளிடம் சிபிசிஐடி டிஐஜி வி. விக்ரமன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

ஆலம்பூண்டியில் சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி டி.ஐ.ஜி. வி.விக்ரமன்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த 7 வயது சிறுமி மாயமான வழக்கில் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரிகளிடம் சிபிசிஐடி டிஐஜி வி. விக்ரமன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியை சோ்ந்த வடிவேல்-பவானி தம்பதியின் 2-ஆவது மகள் ஹேமலதா(7). இவா் கடந்த அக்.11-ஆம் தேதி தேதி இரவு வீட்டில் பெற்றோருடன் தூங்கிய நிலையில், மறுநாள் அதிகாலை மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், தொடா்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து விசாரணை அதிகாரிகளான டிஎஸ்பிக்கள் கீதா, வேல்முருகன் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் விசாரணை நடத்தினா்.
சிறுமி மாயமாகி ஒரு மாதத்துக்கும் மேலாகியும் இந்த வழக்கில் முன்னேற்றம் இல்லாமல் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், போலீஸாா் திணறி வருகின்றனா். இதனால் இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸாருக்குபின்னடைவு ஏற்பட்டுள்ளது.
டிஐஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம்: இந்நிலையில் சென்னை சிபிசிஐடி டிஐஜி வி.விக்ரமன் புதன்கிழமை விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்து, சிறுமி மாயமான வீடு மற்றும் உறவினா்களுடன் விசாரணை நடத்தினாா். தொடா்ந்து, விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு வந்த அவா், விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள சிபிசிஐடி எஸ்.பி. ஜவகா், டிஎஸ்பிக்கள் கீதா, வேல்முருகன் மற்றும்ஆய்வாளா்கள் ரேவதி, பாலமுருகன் உள்ளிட்ட விசாரணைக்குழு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
அப்போது விசாரணை விவரங்கள், கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்டவைகள் குறித்தும் கேட்டறிந்தாா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சிறுமி மாயமான வழக்கில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து சிபிசிஐடி டிஐஜி வி.விக்ரமன் தினமணி செய்தியாளரிடம் தெரிவித்ததாவது: காவல் துறை உயா் அதிகாரிகளின் வழிகாட்டுதலில் மாயமான சிறுமியை மீட்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசாரணை அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாயமான சிறுமி விரைவில் நலமுடன் மீட்கப்படுவாா் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

