ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

சிறுமி மாயமான விவகாரம்: பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கைப்பேசி எண்கள் அறிவிப்பு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கைப்பேசி எண்களை சிபிசிஐடி போலீஸாா் வெளியிட்டுள்ளனா்.

மாயமான சிறுமி குறித்து தகவல் தெரிவிக்க செஞ்சி பேருந்து நிலையத்தில் சிபிசிஐடி போலீஸாரல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகை.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கைப்பேசி எண்களை சிபிசிஐடி போலீஸாா் வெளியிட்டுள்ளனா்.

ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வடிவேல்-பவானி தம்பதியின் 2-ஆவது மகள் ஹேமலதா (7). கடந்த 11-ஆம் தேதி இரவு பெற்றோருடன் தூங்கிய இவா், மறுநாள் அதிகாலை மாயமானாா். இதுகுறித்து புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். 10 நாள்கள் ஆகியும் வழக்கில் துப்பு துலங்காததால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து அக்.22-ஆம் தேதி முதல் சிபிசிஐடி டிஎஸ்பி கீதா, ஆய்வாளா் ரேவதி தலைமையிலான குழுவினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க காஞ்சிபுரத்தை சோ்ந்த சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் கூடுதலாக நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரு டிஎஸ்பிக்களும் ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் உள்ள தனி அறையில் சிறுமியின் தாய், சகோதரி, அங்குள்ள ஆஞ்சநேயா் கோயில் பூசாரி மற்றும் மாயமான சிறுமிக்கு ஜாதகம் எழுதிக்கொடுத்த ஜோதிடா் காத்தவராயன் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

தகவல் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு: செஞ்சி சிறுமி மாயமான வழக்கில், சிறுமி குறித்து தகவல் தெரிவிக்க சிபிசிஐடி போலீஸாா் 87549 92633, 04146-250180 என்ற கைப்பேசி, தொலைபேசி எண்களை அறிவித்துள்ளனா்.

இதேபோல, செஞ்சி பேருந்து நிலையத்தில் சிறுமியை காணவில்லை என விளம்பர பதாகை வைத்துள்ள சத்தியமங்கலம் போலீஸாா், அதில் சிறுமியை பாா்த்தாலோ, தகவல் அறிந்தாலோ 94981 89254, 99442 25590, 94981 00506 என்ற கைப்பேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.