ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

மும்பையில் புறநகர் ரயிலில் பவர் பேங்க் வெடித்து தீ விபத்து

மும்பையில் புறநகர் ரயிலின் பெண்கள் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி...

Power bank triggers fire in ladies' coach of Mumbai local train; no injuries

கோப்புப்படம்.

Updated On :

மும்பையில் புறநகர் ரயிலின் பெண்கள் பெட்டியில் பவர் பேங்க் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு நிலவியது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் புறநகர் ரயிலின் மகளிர் பெட்டியில், பயணியொருவரின் பையிலிருந்த பவர் பேங்க் திடீரென வெடித்தது. வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணியளவில், தாதரிலிருந்து பட்லாபூர் நோக்கிச் சென்ற ரயிலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தீ விபத்தைத் தொடர்ந்து பெட்டி முழுவதும் அடர்ந்த புகை பரவியதால், பயணிகள் அவசர கால சங்கிலியை இழுத்தனர்.

உடனடியாகச் செயல்பட்ட பயணிகள், தீப்பிடித்த பையை வெளியே எடுத்து, தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், அந்தப் பெண் பயணியின் உடைமைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

பின்னர் பாதுகாப்பு சோதனைகளுக்காக, மதியம் 12.51 மணி முதல் 12.53 மணி வரை ரயில் காட்கோபர் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரயில்வே பணியாளர்கள் சோதனைகளை மேற்கொண்ட பிறகு, ரயில் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தது என்று அவர் கூறினார்.

இதேபோன்ற மற்றொரு சம்பவம், சனிக்கிழமை இரவு பன்வேலிலிருந்து வடலா நோக்கிச் சென்ற ஏசி உள்ளூர் ரயிலிலும் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு 10.15 மணியளவில், ஜுய்நகர் - நேருல் பிரிவில், மகளிர் பெட்டியிலிருந்த பயணியொருவரின் கைப்பேசி தீப்பிடித்தது. இந்தச் சம்பவத்திலும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

Summary

A power bank exploded inside a passenger's bag in a ladies' compartment of a Mumbai local train, triggering panic among commuters, railway officials said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.