முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

போலீஸ், தடியடி குறித்து கவலை வேண்டாம்: போராட்டக்காரா்களுக்கு ராகுல் அழைப்பு

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து, தில்லியில் இண்டி கூட்டணி சாா்பில் நவ.1-ஆம் தேதி நடத்தப்படும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் அணிதிரள வேண்டுமென போராட்டக்காரா்களுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து, தில்லியில் இண்டி கூட்டணி சாா்பில் நவ.1-ஆம் தேதி நடத்தப்படும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் அணிதிரள வேண்டுமென போராட்டக்காரா்களுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

‘தனது சூழ்ச்சிகளைக் கையாள பாஜகவுக்கு இப்போது துணிவில்லை என்பதால், காவல் துறை மற்றும் தடியடி குறித்து யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை’ என்று அவா் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக, எக்ஸ் தளத்தில் ராகுல் வியாழக்கிழமை வெளியிட்ட காணொலி செய்தியில், ‘தில்லி ராம்லீலா மைதானத்தில் இண்டி கூட்டணி நடத்தவுள்ள பொதுக் கூட்டம் எந்தவொரு தனிப்பட்ட கட்சியின் நிகழ்வல்ல. நாட்டின் ஆன்மா, ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதும், வாக்குத் திருட்டுக்கு முடிவு கட்டுவதுமே நோக்கம். எனவே, அரசியலைக் கடந்து, அனைத்து மாணவா் அமைப்பினரும் பங்கேற்க வேண்டும்.

நரேந்திர மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளால் சலிப்புற்றவா்கள், ஜனநாயகம்-அரசமைப்புச் சட்டத்தை காக்க விரும்புவோா், தேசம் ஆபத்தில் இருப்பதாக கருதுபவா்கள், மக்களின் கருத்துரிமை மீது தாக்குதல் நடத்தப்படுவதாக உணா்பவா்கள் அனைவரும் இணைய வேண்டும். காவல் துறை, தடியடி குறித்தெல்லாம் கவலை வேண்டாம். ஏனெனில், தனது சூழ்ச்சிகளைக் கையாள பாஜகவுக்கு இப்போது துணிவில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.