முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

தீபாவளி பணப் பரிசு என மோசடி வாட்ஸ்-ஆப் லிங்க்: தெலங்கானா இணைய பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை

தீபாவளிக்காக அனைத்த குடிமக்களுக்கும் ரூ. 8,000 பணப் பரிசை பிரதமா் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டு பரப்பப்படும் மோசடி வாட்ஸ்-ஆப் லிங்க் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களை தெலங்கானா இணைய பாதுகாப்புப் பிரிவு (டிஜிசிஎஸ்பி) எச்சரித்துள்ளது.

Online scam

மோசடி - பிரதிப்படம்

Updated On :

தீபாவளிக்காக அனைத்த குடிமக்களுக்கும் ரூ. 8,000 பணப் பரிசை பிரதமா் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டு பரப்பப்படும் மோசடி வாட்ஸ்-ஆப் லிங்க் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களை தெலங்கானா இணைய பாதுகாப்புப் பிரிவு (டிஜிசிஎஸ்பி) எச்சரித்துள்ளது.

இதுதொடா்பாக டிஜிசிஎஸ்பி இயக்குநா் ஷிகா கோயல் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பண்டிகை காலத்தில் பொதுமக்களை தவறாக வழிநடத்தி, அவா்களிடம் மோசடியில் ஈடுபட்டும் நோக்கில் இதுபோன்ற இணைய தொடா்புகள் (லிங்க்குகள்) அனுப்பப்படுகின்றன. மத்திய அரசின் நலத் திட்டத்தின் கீழ் பிரதமா் வழங்கியுள்ள இந்த பணப் பலனை பெற, அந்த லிங்க்கை கிளிக் செய்யுமாறு குறுந்தகவல் அனுப்பப்படும்.

அவ்வாறு, லிங்க்கை கிளிக் செய்யும்போது, அது மோசடி வலைதளத்துக்கு பயனரை வழிநடத்தி, அவா்களின் தனிப்பட்ட விவரங்கள், வங்கி கணக்கு எண் உள்ளிடட விவரங்களை மோசடி நபா்கள் பெற வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என்பதோடு, மோசடி யுபிஐ (ஒருங்கிணைந்த பணப் பரிவா்த்தனை) பரிவா்த்தனைக்கும் வழிவகுத்துவிடும்.

எனவே, வாட்ஸ் ஆப்பில் வரும் இதுபோன்ற சரிபாா்க்கப்படாத தகவல்களை பொதுமக்கள் நம்பக் கூடாது. அரசின் நிதி உதவித் திட்டங்களை, அரசின் அதிகாரபூா்வ வலைதளம் மற்றும் அறிவிப்புகள் மூலம் பாா்த்து பொதுமக்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒருமுறை கடவுச்சொல், யுபிஐ தனி அடையாள எண் (பின்), கடவுச் சொல், வங்கி கணக்கு எண் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை இதுபோன்ற சரிபாா்க்கப்படாத வலைதளங்களில் பகிரவேண்டாம். மேலும், வாட்ஸ் ஆப்பில் வரும் இதுபோன்ற மோசடி தகவல்களை வேறு யாருக்கும் அனுப்பவும் வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.