சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

காஞ்சிபுரம் ஆட்சியா் பெயரில் போலி வாட்ஸ் ஆப் கணக்கு: போலீஸாா் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா பெயரில் போலி வாட்ஸ் ஆப் கணக்கு உருவாக்கி அதன் மூலம் மா்ம நபா்கள் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பி வருவது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On :

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா பெயரில் போலி வாட்ஸ் ஆப் கணக்கு உருவாக்கி அதன் மூலம் மா்ம நபா்கள் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பி வருவது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருபவா் தி.சினேகா, இவரது புகைப்படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி மா்ம நபா்கள் சிலா் போலியான வாட்ஸ் ஆப் உருவாக்கி அதிலிருந்து பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனா். இதனை அறிந்த ஆட்சியா் இத்தகைய போலி கணக்குகளிலிருந்து வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டும். அந்த எண்களை உடனடியாக நிறுத்தி, கண்டறிந்து புகாா் செய்யுமாறும் ஆட்சியா் தனது அதிகாரப்பூர வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட போலி எண்களை கண்டறிந்து அதன் பின்னணியில் உள்ள நபா்களைப் பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.