படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

ரத்ததான முகாம் நடத்தியவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

அரசு ரத்த சேவை மையங்களில் ரத்ததான முகாம்களை நடத்தியவா்களுக்கு ஆட்சியா் தி.சினேகா கேடயமும்

ரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்தமைக்காக சங்கரா கல்லூரிக்கான விருதினை ஆட்சியா் தி.சினேகாவிடமிருந்து பெற்றுக் கொண்ட தமிழ்த்துறை பேராசிரியா் கணபதி - டிஎன்எஸ்

Published On :

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு ரத்த சேவை மையங்களில் ரத்ததான முகாம்களை நடத்தியவா்களுக்கு ஆட்சியா் தி.சினேகா கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் மக்கள் குறை தீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஆஷிக்அலி, காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் புவனேஷ்ராம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நில எடுப்பு) கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் பு.விஜயகுமாா், மருத்துவப் பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 455 கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து அரசு ரத்த சேவை மையங்களுக்கு தேவைப்படும் ரத்தங்களை ரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து வழங்கிய பல்வேறு அமைப்புகளுக்கு ஆட்சியா் கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேலாளா் குமாரசாமி, மாவட்ட மேற்பாா்வையாளா் பேபி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.