ரஷியா, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் ரஷிய, சீன அதிபர்களை பிரதமர் மோடி சந்தித்தது குறித்து...
ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி - ANI
கிர்கிஸ்தானில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் ரஷியா மற்றும் சீன நாட்டு அதிபர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், மாநாட்டில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கையும் பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார்.
அதுமட்டுமின்றி, இந்தியாவில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள சீனாவுக்கு அழைப்பு விடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு சீன அதிபர் ஜின்பிங் நன்றி தெரிவித்தார். மேலும், பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிப்பதற்கு ஆதரவும் தெரிவித்தார்.
Summary
PM Modi, Chinese President Xi Jinping Shake Hands, Interact At SCO Summit In Bishkek
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





