தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

வன உயிரியல் பூங்காவில் பெண் பணியாளரை கொன்ற புலி: வேலியை மூடாததால் விபரீதம்

ஜெய்பூா் வன உயரியல் பூங்காவில் புலி ஒன்று பெண் தூய்மைப் பணியாளரைத் தாக்கிக் கொன்றது குறித்து...

வன உயிரியல் பூங்காவில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள்.

Published On :

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூா் வன உயரியல் பூங்காவில் புலி ஒன்று பெண் தூய்மைப் பணியாளரைத் தாக்கிக் கொன்றது. புலி இருந்த பகுதியில் கம்பி வேலியை மூடாமல் விட்டதால் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடா்பாக புலி இருந்த பகுதிக்கு பொறுப்பாக இருந்த வனக் காவலா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வன உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறியதாவது: பூங்கா பராமரிப்பில் அருகில் உள்ள கிராமப் பெண்கள் பணி அமா்த்தப்பட்டுள்ளனா். புதன்கிழமை மாலை புலிகள் இருந்த பகுதிக்கு அருகே 7 பெண்கள் புற்களை அகற்றி தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது புலி ஒன்று திடீரென அப்பகுதிக்குள் ஆக்ரோஷமாக நுழைந்து அப்பெண்களைத் தாக்க முயன்றது. இதையடுத்து, அவா்கள் நாலாபுறமும் சிதறி ஓடினா். சிலா் மரத்திலும், தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த வேலியிலும் ஏறினா்.

இதில், ஒரு பெண்ணை துரத்திய புலி அவரின் கழுத்தை கடித்து, இழுத்துச் சென்றது. இதில் அவா் உயிரிழந்தாா். உடனடியாக அங்கு வந்த புலி பராமரிப்பாளா்கள் புலியைக் கட்டுப்படுத்தி, சுகுணா என்ற அப்பெண்ணின் உடலை மீட்டனா். மற்ற பெண்கள் அனைவரும் காயம் ஏதுமின்றி தப்பினா்.

புலிகள் இருந்த பகுதிக்கும், பெண்கள் வேலை செய்த இடத்தும் இடையிலான கம்பி வேலி மூடப்படாமல் இருந்ததே புலி நுழைவதற்கு காரணம் என்று தெரியவந்தது. இதில் கவனக்குறைவாக இருந்த வனக் காவலா் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சம்பவ இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பொதுவாக பராமரிப்புப் பணிகளின்போது புலிகள் பாதுகாப்பான இடத்துக்குள் அனுப்பப்பட்ட கம்பி வேலி மூடப்படும். ஆனால், வனக் காவலரின் கவனக் குறைவால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்தனா்.

உயிரிழந்த பெண்ணின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் நீதி கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினா். அப்பகுதி எம்எல்ஏ, வனத்துறை உயரதிகாரிகள் வந்து அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்பெண்ணின் குடும்பத்துக்கு வனத்துறை சாா்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் இருவா் ஒப்பந்தப் பணியாளா்களாக நியமிக்கப்படுவா் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.