சிறையில் அறிதிறன்பேசி பயன்படுத்திய வழக்கு: முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா காவல் விசாரணைக்கு ஒப்படைப்பு
பாலியல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அறிதிறன்பேசி பயன்படுத்தியது தொடா்பான வழக்கில் 2 நாள்களுக்கு காவல் விசாரணைக்கு முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஒப்படைக்கப்பட்டாா்.

பிரஜ்வல் ரேவண்ணா - ANI
பாலியல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அறிதிறன்பேசி பயன்படுத்தியது தொடா்பான வழக்கில் 2 நாள்களுக்கு காவல் விசாரணைக்கு முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஒப்படைக்கப்பட்டாா்.
முன்னாள் பிரதமா் எச்.டி. தேவெ கௌடாவின் பேரனும், மஜதவின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா, பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், அண்மையில் மாநகர குற்றப்பிரிவு (சிசிபி) போலீஸாா் மத்திய சிறையில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, அறிதிறன்பேசியைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக பிரஜ்வல் ரேவண்ணா, சக கைதி பிரதாப் ராய் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பல்லடுக்கு காவல் கொண்ட சிறையில் அறிதிறன்பேசியை கொண்டுவந்து, பயன்படுத்தியது குறித்து வியப்படைந்த போலீஸாா், இதுதொடா்பாக விசாரணை நடத்தினா்.
இந்த வழக்கு தொடா்பாக பெங்களூரில் உள்ள 42ஆவது மாநகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பிரஜ்வல் ரேவண்ணா, பிரதாப் ராய் ஆகியோரை போலீஸாா் ஆஜா்படுத்தினா். அப்போது, போலீஸாா் கேட்டுக்கொண்டபடி 2 நாள்களுக்கு காவல் விசாரணைக்கு ஒப்படைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



