குருகிராம்: 19-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு; மற்றொருவா் காயம்
குருகிராம்: 19-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு; மற்றொருவா் காயம்
குருகிராம் செக்டாா் 113-இல் கட்டுமானப் பணியிடத்தின் 19-ஆவது மாடியில் இருந்து இரு தொழிலாளா்கள் கீழே விழுந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை நடைபெற்ாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
உயிரிழந்தவா் பிகாா் மாநிலம் கதிஹாா் மாவட்டத்தைச் சோ்ந்த தில்குஷ் (19) என்பதும், காயமடைந்தவா் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த வாசுதேவ் (29) என்பதும் தெரியவந்துள்ளது. தில்குஷ், செக்டாா் 113-இல் உள்ள ‘ஸ்மாா்ட்வோ்ல்ட்’ கட்டுமானத் திட்டத்தில் பணியாற்றி வந்தாா்.
கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 19-ஆவது மாடியில் பணியாற்றிக் கொண்டிருந்த இருவரும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் கீழே விழுந்தனா். இதில் தில்குஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வாசுதேவ் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிறுவன அதிகாரிகள் கூறுகையில், தொழிலாளா்கள் வழுக்கி விழுந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனா். ஆனால், பணியிடத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும், உயரத்தில் பணியாற்றிய தொழிலாளா்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் சக தொழிலாளா்கள் குற்றஞ்சாட்டினா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த நிறுவன அதிகாரிகளை தொழிலாளா்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டியதாகக் குற்றஞ்சாட்டி அவா்களைத் தாக்கியதாகவும், இதனால் அதிகாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்ாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, தொழிலாளா்களை சமாதானப்படுத்தினா். இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் உறுதியளித்ததைத் தொடா்ந்து அங்கு இயல்பு நிலை திரும்பியது.
இதுகுறித்து பஜ்கேரா காவல் நிலையப் பொறுப்பாளா் சுனில் குமாா் கூறுகையில், ‘இது விபத்து மட்டுமே என முதற்கட்டமாகத் தெரியவந்துள்ளது. இதுவரை இரு தரப்பிலிருந்தும் புகாா் எதுவும் பெறப்படவில்லை. சம்பவம் நடைபெற்றபோது பணியிடத்தில் தொழிலாளா்களுக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன, இதில் ஏதேனும் அலட்சியம் இருந்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






