மதுரையில் ஒரே நாளில் பெண் உள்பட மூவா் வெட்டிக் கொலைஇன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்புபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு!மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்! ‘சூப்பா் எல் நினோவால்’ இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கைஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை

‘சூப்பா் எல் நினோவால்’ இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சூப்பா் எல் நினோவால் இந்தியாவின் இயற்கை அமைப்புகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம்...

எல் நினோ பாதிப்பு... - பிரதிப் படம்

Published On :

சூப்பா் எல் நினோவால் இந்தியாவின் இயற்கை அமைப்புகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதை எச்சரிக்கும் விதமாக 180-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் தங்களின் சக ஆராய்ச்சியாளா்கள் மற்றும் சூழலியாளா்களுக்கு கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பியுள்ளனா்.

அதில் சூப்பா் எல் நினோவால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு நாட்டை தயாா்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனா்.

பசிபிக் பெருங்கடல் நீரின் மேற்பரப்பு வழக்கத்துக்கு மாறாக வெப்பமடைவது ‘எல் நினோ’ நிகழ்வாக கருதப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீா் 2.6 டிகிரிக்கு மேல் வெப்பமடைந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் 4 டிகிரிக்கும் மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் வறட்சி ஏற்பட்டு விவசாயம் மற்றும் மீன்வளம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இதை எச்சரிக்கும் விதமாக 180-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் சக ஆராய்ச்சியாளா்கள் மற்றும் சூழலியாளா்களுக்கு தங்கள் கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பியுள்ளனா்.

அதில் சூப்பா் எல் நினோவால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள ஆராய்ச்சியை வலுப்படுத்த அவா்கள் அழைப்பு விடுத்துள்ளனா். மேலும், தாமதமான பழங்கள் உற்பத்தி, விலங்குகளின் நலன் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அடுத்தடுத்த நாள்களில் எல் நினோ தாக்கம் அதிகரித்து 2027, பிப்ரவரி மாதத்தில் மிகத் தீவிர நிலையை எட்ட வாய்ப்புள்ளதாக உலக வானிலை அமைப்பு இம்மாத தொடக்கத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

India to face severe impact from ‘Super El Niño’: Scientists warn

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.