பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணையை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவு?தனியார் விமானத்தில் பறக்கும் முதல்வர்! அரசு செலவு அல்ல, தனிநபர் செலவிடுவதாக விளக்கம்!புனரமைக்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகம்! 28-ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர்!செல்போனுக்கு மாற்றா? மெட்டா நிறுவனர் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட கையடக்க மியூஸ் சார்ம்! எல் நினோவால் 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்! ஆய்வறிக்கைஅரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி! திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்

எல் நினோவால் 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்! ஆய்வறிக்கை

எல் நினோவால் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும் என்ற ஆய்வறிக்கை பற்றி...

El Nino

எல் நினோவால் 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்! ஆய்வறிக்கை - Photo | Express

Published On :

'சூப்பர் எல் நினோ'வால் அடுத்த 6 மாதங்களில் உலகம் முழுவதும் 4.5 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் எல் நினோ தாக்கத்தால் உலகளவில் கடுமையான வறட்சி, வெப்பநிலை உயர்வு மற்றும் அசாதாரண பருவமழை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக ஆய்வு செய்துள்ள கிளைமேட் இம்பாக்ட் லேப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சூப்பர் எல் நினோவால் செப்டம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரையிலான காலகட்டத்தில் ஏற்படவுள்ள கடும் வெப்பத்தால் சுமார் 4,51,000-க்கும் மேல் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஏற்படும் வெப்பம் தொடர்பாக உயிரிழப்புகளில் பெரும்பான்மையானவை தென்பகுதியில் உள்ள நாடுகளில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் இயங்கும் கிளைமேட் இம்பாக்ட் லேப் என்பது காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் போன்றவை உலகெங்கிலும் உள்ள மக்கள், பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் ஆராய்ச்சிக் கூட்டமைப்பாகும்.

இந்த ஆய்வு குறித்து கிளைமேட் இம்பாக்ட் லேப்பின் இணை நிறுவனர் மைக்கேல் கிரீன்ஸ்டோன் தெரிவித்ததாவது:

“எல் நினோ காரணமாக வரும் மாதங்களில் 4,51,000 பேர் உயிரிழக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நம்மை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு மிகப் பெரிய எண்ணிக்கையாகும். இதில், குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அடங்குவர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆய்வறிக்கையின்படி, அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக சஹேல் பிராந்தியம் உள்ளன. இந்த பகுதியில் உயிரிழப்பு எண்ணிக்கை 66,800-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் நைஜீரியாவில் 31,400, சூடானில் 17,500, நைஜரில் 10,000 மற்றும் சாட் நாட்டில் 8,000 உயிரிழப்புகள் அடங்கும்.

தென்கிழக்கு ஆசியாவைப் பொறுத்தவரை, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் இணைந்து 19,400 கூடுதல் உயிரிழப்புகளைச் சந்திக்கக்கூடும். அதேவேளையில் இந்தோனேசியாவில் 19,300 உயிரிழப்புகள் பதிவாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் அடுத்த பிப்ரவரி மாதத்துக்குள் 15,800 பேர் வெப்பம் சார்ந்த பிரச்னைகளால் உயிரிழக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்ச்சியூட்டும் மையங்கள், நீர்ச்சத்து வசதிகள், திறந்தவெளியில் பணியாற்றுவோருக்கான பாதுகாப்பு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த மதிப்பீடுகள் அரசாங்களுக்கு உதவும் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

El Niño could cause 450,000 deaths over the next six months! Study report.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.