
போர் இந்தியப் பெருங்கடல் வரை விரிவாகும்! - ஈரான் எச்சரிக்கை!
அமெரிக்கா மீண்டும் தாக்கினால் போர் இந்தியப் பெருங்கடல் வரை விரிவாக்கப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது...

ஈரானில் அரசுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில்... - கோப்புப் படம் | ஏபி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீண்டும் தாக்கினால் போர் இந்தியப் பெருங்கடல் வரையிலும் விரிவாக்கப்படும் என ஈரானிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனியின் ஆலோசகரான மேஜர்-ஜெனரல் யஹியா ரஹிம் சஃபாவி, ஈரானுக்கு ஆதரவாக யேமனின் ஹௌதி படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் குறிபிட்டு இன்று (செப். 24) விடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீண்டும் ஈரானின் மீது தாக்குதல் மேற்கொண்டால் நடைபெற்று வரும் போரானது இந்தியப் பெருங்கடல் வரையிலும் விரிவாகக் கூடும் என அவர் கூறியுள்ளார்.
இதுபற்றி, அந்த விடியோவில் அவர் கூறியதாவது:
“ஏற்கெனவே, இந்த மோதலானது பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து செங்கடல் வரையிலும் பரவியுள்ளதால், போருக்குப் பதிலடியாக இந்தியப் பெருங்கடல் வரையிலும் அதற்கு மேலும் விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி கொடுக்க ஈரானிய ராணுவம் திட்டங்களைத் தயார்நிலையில் வைத்துள்ளது. 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கள் பகுதியைப் பாதுகாக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து யேமன் மக்கள் உறுதியாக நிற்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் சௌதி அரேபியாவுக்கு எதிரான யேமனின் ஹௌதிகள் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், யேமனில் சௌதியின் ஆதரவுபெற்ற அரசுப்படைகளுக்கும் ஹௌதிகளுக்கும் இடையே உள்நாட்டு மோதல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The Iran has warned that if the US and Israel attack again, the war will extend as far as the Indian Ocean.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






