இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

1965 இந்தியா - பாக். போர் நாயகன் ஏ.டி. குக் காலமானார்! விமானப் படை இரங்கல்!

1965 இந்தியா - பாகிஸ்தான் போர் நாயகனும் ஓய்வுபெற்ற விமானப் படை வீரருமான ஏ.டி. குக் காலமானார்...

Flight Lieutenant Alfred Tyrone Cooke

ஓய்வுபெற்ற விமானப் படை வீரருமான ஏ.டி. குக் காலமானார் - Indian Air Force

Published On :

1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரின் நாயகனும் ஓய்வுபெற்ற விமானப் படை வீரருமான ஆல்ஃபிரட் டைரோன் குக் காலமானார்.

1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரின்போது மேற்கு வங்கத்தின் கலைகுண்டா பகுதியில் எதிரி விமானங்களுடன் ஏ.டி. குக் நடத்திய விமானச் சண்டையானது இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது.

விமானப் படையில் இருந்து ஓய்வுபெற்று ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசித்து வந்த ஏ.டி. குக் விமானப் படையின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இந்தியா வந்திருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் தில்லியில் நேற்று (செப். 19) காலமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலோ இந்தியரான ஏ.டி. குக் தன் மறைவுக்குப் பிறகு தனது உடலைத் தகனம் செய்து அஸ்தியை இந்தியாவின் புனித நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என விரும்பியதாக, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மேஜர் மனிஷ் பட்நகர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதையடுத்து, முன்னாள் வீரர் ஏ.டி. குக்கின் மறைவுக்கு இந்திய விமானப் படை மற்றும் ஏராளமான மூத்த ராணுவ அதிகாரிகள் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Summary

Alfred Tyrone Cooke, a hero of the 1965 India-Pakistan war and a retired Air Force veteran, has passed away.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.