1971 இந்தியா - பாகிஸ்தான் போர் நாயகன் பிரிகேடியர் வசந்த் குமார் பொன்வார் காலமானார்.
இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரியும், 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரின் நாயகனாக அறியப்படும் பிரிகேடியர் வசந்த் குமார் காலமானார் என அவரது குடும்பத்தினர் இன்று (ஜூலை 29) அறிவித்துள்ளனர்.
கடந்த 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரில் இளம் ராணுவ வீரரான வசந்த் குமார் பொன்வார், முக்தி பாஹினி வீரர்களுடன் இணைந்து ஏராளமான எல்லையைக் கடந்த நடவடிக்கைகளில் பங்கேற்றவராக அறியப்படுகிறார்.
இந்தூரைச் சேர்ந்த வசந்த் குமார் 36 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றதும், மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் காவல் துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.
சத்தீஸ்கர் அரசால், கடந்த 2005 ஆம் ஆண்டு மாநில காவல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்ட வசந்த் குமார் பொன்வார் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளுக்குப் பல்வேறு முக்கிய திட்டங்களை வகுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சத்தீஸ்கரில் கடந்த 2005 ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் காட்டுப் போர்முறைப் பயிற்சிகளை அளிக்கும் பள்ளியைத் துவங்கிய வசந்த் குமார், சுமார் 18 ஆண்டுகள் அந்தப் பள்ளியின் இயக்குநராகப் பணியாற்றினார்.
இவரது வழிகாட்டுதலின் கீழ் சத்தீஸ்கரின் காவல் துறை மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 37,000 வீரர்கள் பயிற்சி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிகேடியர் வசந்த் குமாரின் மறைவுக்கு சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Summary
Brigadier Vasant Kumar Ponwar, a hero of the 1971 India-Pakistan war, has passed away.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி: பிளாசிப் போர் முதல் இந்தியா சுதந்திரம் அடைவது வரை!

பயங்கரவாதிகளுக்கான ஆதரவை நிறுத்தாதவரை பாகிஸ்தானுடன் சிந்து நதி நீரைப் பகிர மாட்டோம்: ஐ.நா.வில் இந்தியா உறுதி

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானின் கடும் அத்துமீறல்கள்: சா்வதேச நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்

இந்தியா-பாகிஸ்தான் சண்டையின்போது 11 போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: டிரம்ப் மீண்டும் கருத்து
விடியோக்கள்

நாராயணபுரம் ஏரி தூர்வாரும் பணிகள்: அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு | Minister N Anand |




