தில்லி சிறுமிக்கு நடந்த கொடூரம்! பாலினம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட உடல்! காட்டிக்கொடுத்த தடயம்!
தில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாலினம் காண முடியாத அளவுக்கு உடல் சிதைக்கப்பட்டது பற்றி..

தில்லி சம்பவம்
தில்லியின் ஸ்வரூப் நகரில், திறந்தவெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல், ஆணா, பெண்ணா என அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்ததால், முதலில், உடல் ஆணுடையது என காவல்துறையினர் தவறுதலாக கருதியது தெரிய வந்துள்ளது.
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் மூன்று சிறார்கள் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மிகவும் அழுகிய நிலையில், சிதைக்கப்பட்டிருந்த உடலில், விலா எலும்புகள் வெளியே தெரிய, கைகள் வெட்டி எடுக்கப்பட்டு, உடல் உறுப்புகள் நசுக்கப்பட்டிருந்ததாகக் காவல்துறை தெரிவிக்கிறது.
முதற்கட்ட விசாரணையில்தான், கண்டெடுக்கப்பட்ட உடல், சிறுமியுடையது என்றும், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலையுண்டதும் தெரிய வந்துள்ளது.
முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருப்பதாகவும், பல இடங்களில் எலும்புகள் வெளியே தெரிவதாகவும், வலது கை காணாமல் போயிருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.
முதலில், உடலைக் கண்டதும், அது பெண்ணுடையது என்று அடையாளம் காண முடியவில்லை. அந்த அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது. மண்டை ஓடு, விலா எலும்பு வெளியே தெரிந்தது, நாங்கள் பார்த்தபோது, அது ஒரு நடுத்தர ஆணின் உடல் என்று நினைத்தோம் என்கிறார்கள்.
உடலில், பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன. ஆணின் பிறப்புறுப்பு அறுத்தெறியப்பட்டிருக்கலாம் என்றே முதலில் கருதப்பட்டுள்ளது.
ஆனால் உடல் கூராய்வுக்குப் பிறகே, அது பெண் என்றும், பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருக்கிறார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண் நீல நிற ஜீன்ஸ், ஊதா நிற மேலாடை அணிந்திருந்தார். உடல் முற்றிலும் அழுகிவிட்டதால் முகத்தையும் அடையாளம் காண முடியாமல் போனது.
பிறகுதான், கையில் ஓரிடத்தில் மூன்று நட்சத்திரங்களை பச்சைக் குத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு, காணாமல் போன பெண்கள் குறித்து புகார் அளித்த குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியபோது, அதில் ஒருவர் வைத்திருந்த பெண்ணின் புகைப்படத்தில் அதே மூன்று நட்சத்திரம் பச்சைக் குத்தப்பட்டிருந்த பெண்தான் காணாமல் போனவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் பெற்றோர், தினக்கூலி என்பதால் சரியான வயதை குடும்பத்தினரால் சொல்ல முடியவில்லை. 15 முதல் 17 ஆக இருக்கலாம் என்கிறார்கள்.
சம்பவம் செப். 13ஆம் தேதி நடந்துள்ளது. பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, குத்திக் கொலை செய்து வயலில் வீசியிருக்கிறார்கள். இந்தக் கொலையில் மூன்று சிறார்கள் உள்பட நான்கு பேருக்குத் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டு டெம்ரோ வாகனத்தில் குற்றவாளிகள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர் அளித்த தகவலின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






