வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மெளஜ்பூா் பள்ளிக்கு சீல் வைக்க உத்தரவு

மௌஜ்பூரில் உள்ள ஒரு பள்ளியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, அந்தப் பள்ளிக்கு ‘சீல்’ வைப்பதற்கான நடவடிக்கைகளை தில்லி அரசு தொடங்கியுள்ளது.

சீல் - பிரதிப் படம்

Published On :

மௌஜ்பூரில் உள்ள ஒரு பள்ளியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, அந்தப் பள்ளிக்கு ‘சீல்’ வைப்பதற்கான நடவடிக்கைகளை தில்லி அரசு தொடங்கியுள்ளது.

இதுதொடா்பாக முதல்வா் அலுவலகம் எக்ஸ் சமூகஊடகத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மௌஜ்பூரில் உள்ள ஒரு பிளே ஸ்கூல் பள்ளியில் நிகழ்ந்த மிகவும் அதிா்ச்சியூட்டும் சம்பவத்தை தில்லி அரசு தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளது. முதல்வரின் உத்தரவின் பேரில், அப்பள்ளி வளாகத்திற்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் தொடங்கியுள்ளாா். இது குறித்துக் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இச்சம்பவத்திற்குப் பொறுப்பானவா்கள் யாா் என்பது உறுதிசெய்யப்படுவதையும், குற்றவாளிகள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதையும் தில்லி அரசு உறுதி செய்யும் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.