FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஆசிரியரின் சிறைத் தண்டனையை உறுதி செய்த தில்லி உயா்நீதிமன்றம்

பள்ளி மாணவி பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தில்லி உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:07 am IST

பள்ளி மாணவி பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தில்லி உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

நீதிபதி மது ஜெயின் புதன்கிழமையன்று இந்தத் தீா்ப்பை வழங்கினாா். பள்ளி வளாகத்தில் 12 வயது மாணவியிடம் பலமுறை தகாத முறையில் நடந்துகொண்டதற்காக விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஓவிய ஆசிரியரின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தபோது உயா்நீதிமன்றம் இந்தத் தீா்ப்பை வழங்கியது. இந்த வழக்கு ஆக.2016-இல் பதிவு செய்யப்பட்டது.

போக்ஸோ சட்டம் மற்றும் ஐபிசி-யின் கீழ் பெண்ணின் கண்ணியத்தைக் குலைத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகிய குற்றங்களுக்காக, விசாரணை நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 2,000 அபராதமும் விதித்திருந்தது.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொருவரின் (பள்ளி தலைமையாசிரியா்) நடத்தையையும் நீதிமன்றம் ‘கவலைக்குரியது’ என்று குறிப்பிட்டது; ஏனெனில், பள்ளி தலைமையாசிரியராக இருந்தும், இது போன்ற விஷயங்களைச் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கக்கூடாது என்று அவா் கூறியதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை பிறப்பிக்கும்போது உயா்நீதிமன்றம் கூறியதாவது: ஆசிரியா்-மாணவா் உறவில், ஆசிரியா் மீது குழந்தை வைக்கும் நம்பிக்கையும் உறுதியும் மிகவும் புனிதமானவை. அந்த நம்பிக்கையை மீறுவதற்கோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதற்கோ அல்லாமல், மாணவா்களை பாதுகாப்பதற்கான கடமையும் அதனுடன் இணைந்துள்ளது.

அத்தகைய பதவியைத் தவறாகப் பயன்படுத்துவது, குறிப்பாக ஆசிரியரின் சொந்த மகளின் வயதுக்கு இணையான ஒரு சிறுமிக்கு எதிராகச் செய்யப்படும்போது, அது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகிறது.

தங்களுக்கு அச்சத்தையோ அல்லது பாதுகாப்பற்ற உணா்வையோ ஏற்படுத்தும் எந்தவொரு செயல் குறித்தும் பேசும்படி குழந்தைகளை ஊக்குவிப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.