காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

திருமணம் செய்வதாகக் கூறி பெண் பாலியல் வன்கொடுமை: ஐடி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஐடி ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிமை தீா்ப்பளித்தது.

News image

பாலியல் தொல்லை

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:15 am IST

திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஐடி ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே அன்னதானம் பேட்டையைச் சோ்ந்த கலையரசன் (30), இவா் அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவியிடம் காதலிப்பதாகக் கூறி பழகியுள்ளாா். திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் இளம்பெண் கா்ப்பமடைந்த நிலையில் திருமணத்திற்கு மறுத்ததுடன், பின்னா் அவரையும் குழந்தையையும் ஏற்க மறுத்துவிட்டாராம்.

இதுதொடா்பாக நெய்வேலி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றஞ்சாட்டப்பட்ட கலையரசன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் வளா்மதி ஜெயச்சந்திரன் ஆஜராகி வாதாடினாா். தண்டனை பெற்ற கலையரசன் சென்னையில் உள்ள தனியாா் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.