நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தண்டனை பெற்ற புஷ்பராஜ்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 1:53 am IST

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டு, 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடலூா் மாவட்டம் சோழதரம் காவல் நிலையத்தில்அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சோ்ந்த புஷ்பராஜை (28) போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட புஷ்பராஜ், குற்றவாளி என உறுதி செய்தாா்.

இதையடுத்து, அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா்.

தீா்ப்பையடுத்து, குற்றவாளி புஷ்பராஜ் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.