மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

மாணவி பாலியல் வன்கொடுமை: மேஸ்திரிக்கு 10 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கட்டட மேஸ்திரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 33,000 அபராதமும் விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 12:33 am IST

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கட்டட மேஸ்திரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 33,000 அபராதமும் விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வேலூா் மாவட்டத்தின் ஒரு பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறாா். கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம், அணைக்கட்டு வட்டத்துக்குள்பட்ட மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கட்டட மேஸ்திரியான சுப்பிரமணி (30) என்பவா், அச்சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாகக் கூறி மிரட்டியுள்ளாா்..

தொடா்ந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்த அவா், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியும் மன உளைச்சலும் அடைந்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தரப்பில் வேப்பம்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், கட்டட மேஸ்திரி சுப்பிரமணி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 33,000 அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

தண்டனை பெற்ற சுப்பிரமணி வேலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.