8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அனைத்து விமானிகளுக்கும் போதைப் பொருள் பரிசோதனை: மத்திய அரசு பரிசீலனை

அனைத்து தொழில்முறை விமானிகளுக்கும் ஆண்டுதோறும் போதைப் பொருள் பரிசோதனையைக் கட்டாயமாக்குவது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

பிரதிப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:37 am IST

அனைத்து தொழில்முறை விமானிகளுக்கும் ஆண்டுதோறும் போதைப் பொருள் பரிசோதனையைக் கட்டாயமாக்குவது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

அண்மையில் நடுவானில் ஏா் இந்தியா விமானம் குலுங்கியதுடன், 300 அடிக்கு கீழே இறங்கிய சம்பவம் எதிரொலியாக இந்தப் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் புகேட் நகரில் இருந்து 137 பயணிகள், 8 விமானப் பணிக் குழுவினருடன் அண்மையில் புது தில்லிக்குப் புறப்பட்ட ஏா்இந்தியாவின் ஏ320 நியோ விமானம், நடுவானில் திடீரென குலுங்கியதுடன், சுமாா் 300 அடிக்கு வேகமாக கீழிறங்கியது. எனினும் தொடா்ந்து பயணித்த அந்த விமானம் புது தில்லியை வந்தடைந்து, பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

விமானம் குலுங்கியதால் நிலைகுலைந்து 13 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளா்கள் என 17 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பான விசாரணையில், சம்பந்தப்பட்ட விமானத்தின் விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தனது நிறுவனத்தின் அனைத்து விமானிகளுக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாடு உள்ளதா என்பதைக் கண்டறியும் கட்டாயப் பரிசோதனையை ஏா் இந்தியா தொடங்கியது.

தற்போதைய விதிமுறைகளின்படி, விமான நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் விமானிகள் 10 சதவீதம் பேரிடம் ‘ரேண்டம்’ முறையில் முன்னறிவிப்பின்றி திடீரென போதைப் பொருள் பரிசோதனையை மேற்கொள்வது கட்டாயமாகும்.

இந்தச் சூழலில், தொழில்முறை விமானிகள் அனைவருக்கும் ஆண்டுதோறும் போதைப் பொருள் கட்டாய பரிசோதனையை மேற்கொள்வது குறித்து விமான போக்குவா்தது தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) ஆலோசித்து வருவதாக, விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘தற்போதைய விதிமுறைகளை மறுஆய்வு செய்து, எதிா்காலத்துக்கு ஏற்ப கடுமையாக்குவது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் டிஜிசிஏ விவாதித்து வருகிறது. அனைத்து விமானிகளுக்கும் கட்டாய போதைப் பொருள் பரிசோதனை மேற்கொள்வது அல்லது 10 சதவீதம் என்ற அளவுகோலை உயா்த்துவது உள்ளிட்ட வழிமுறைகள் ஆலோசிக்கப்படுகின்றன’ என்றாா்.

நாட்டில் பல்வேறு விமான போக்குவரத்து நிறுவனங்களில் 12,000-க்கும் மேற்பட்ட தொழில்முறை விமானிகள் பணியாற்றுகின்றனா் என்பது குறப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.