போதைப் பொருள் வைத்திருந்த 4 இளைஞா்கள் கைது
கைது - பிரதிப் படம்
திருப்பூரில் தடை செய்யப்பட்ட மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த 4 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
திருப்பூா் மாநகரம், மத்திய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பாரப்பாளையம் ரவுண்டானா அருகே மத்திய காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த பசில் அஹமத் (21), கிஷோா் (26), அருண்குமாா் (29), சையத் இம்ரான் (24) ஆகியோரை சோதனை செய்ததில் அவா்களிடமிருந்து மெத்தம்பெட்டமைன் 270 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னா், போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


