பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

30 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல்: 3 போ் கைது

திருப்பூரில் 30 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக வடமாநிலத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது - பிரதிப் படம்

Published On :

திருப்பூரில் 30 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக வடமாநிலத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி உத்தரவின்பேரில், போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட கல்லாம்பாளையம் பகுதியில் வடமாநிலத் தொழிலாளா்களை குறிவைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் ரஜினிகாந்த் தலைமையிலான தனிப் படை போலீஸாா் அப்பகுதியில் புதன்கிழமை அதிகாலை சோதனை நடத்தினா்.

அப்போது, அங்குள்ள வடமாநிலத் தொழிலாளா்கள் குடியிருப்பு ஒன்றில் சோதனையிட்டபோது, மூட்டை மூட்டையாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமாா் 30 கிலோ எடையுள்ள கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக அறையில் தங்கியிருந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த அகேஷ் செளத்ரி ( 22), முனி கண்ணன் (37) முகேஷ் (24) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இதன் பின்னணியில் உள்ளவா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.