மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

கோவில்பட்டியில் 2 இளைஞா்கள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:27 am IST

கோவில்பட்டியில் இரு இளைஞா்கள் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாரதிநகா் பகுதியைச் சோ்ந்த முனியசாமி மகன் ஞானதிரவியம் (30) என்பவா் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கப்பட்டாா். இதில் அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவத்தில் தொடா்புடையதாகக் கூறப்படும், பாரதி நகரைச் சோ்ந்தவா்களான செல்லபாண்டி மகன் மகாராஜன் (35) முத்து மகன் முத்துராஜ் (25) ஆகியோா் மீது மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்தனா்.

இந்நிலையில் இருவரையும் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் வானமாமலை அறிக்கை அளித்தாா். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ததையடுத்து ஆட்சியா் விஷு மகாஜன் உத்தரவின்படி, மகாராஜன், முத்துராஜ் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.