தாய்லாந்திலிருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானம் குலுங்கிய விவகாரத்தில் போதைப்பொருள் சோதனையில் சிக்கிய விமானி, விமான விபத்து விசாரணை ஆணையத்திடம் அதிர்ச்சித் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தாய்லாந்தின் புகேட் நகரில் இருந்து கடந்த ஆக. 4 ஆம் தேதி 137 பயணிகள், 8 விமானப் பணிக்குழுவினருடன் இந்தியாவுக்கு வந்த ஏர் இந்தியாவின் ஏர்பஸ் ஏ320 நியோ ரக விமானம் சுமார் 300 அடி உயரத்திலிருந்து திடீரென நடுவானில் காற்றோட்டத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக திடீரென குலுங்கி, அதன்பின்னர் தில்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 17 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் பூதகரமாக வெடித்த நிலையில், சம்பவத்திற்குப் பிறகு இரண்டு விமானிகளுக்கும் கட்டாய மனோவியல் பரிசோதனை நடத்தப்பட்டது.
முதல்கட்ட சோதனையில், விமானத்தின் கேப்டனான முதன்மை விமானியின் சோதனை முடிவில் ‘எதிர்மறையற்றது - not negative’ என்று வந்ததை தொடர்ந்து, ஆய்வகப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர் கஞ்சா வகை போதைப்பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் விமான விபத்து விசாரணை ஆணையம், இரு விமானிகளிடமும் சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.
போதைப் பொருள் பரிசோதனையில் சிக்கிய கேப்டனிடம் புதன்கிழமை சுமார் ஒரு மணிநேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்துள்ளது.
விசாரணையின்போது, தூக்கமின்மைப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிவித்த கேப்டன், புகேட்டில் தங்கியிருந்தபோது குடும்ப மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை உட்கொண்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், தில்லி பயணத்தின் போது 30 முதல் 35 நிமிடங்கள் வரை விமானத்தில் தூங்கியதாக விமானி தெரிவித்துள்ளார். பின்னர், கழிப்பறை சென்றுவிட்டு திரும்பிய கேப்டன், துணை விமானி இருக்கைக்கு பின்னால் நின்று பேசிக் கொண்டிருந்தபோது குலுங்கியதாகவும், தானும் கீழே விழுந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த விமானத்தில் பயணித்த விமான ஊழியர்களும் கேப்டன் கூறிய தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.
Summary
Air India Incident! Shocking details revealed by pilot caught in drug test!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏர் இந்தியா விமானம் குலுங்கிய விவகாரம்: போதைப்பொருள் சோதனையில் சிக்கினாரா விமானி?

ஏர் இந்தியா எரிபொருள் கூடுதல் கட்டணம் குறைப்பு: சர்வதேச விமானக் கட்டணங்கள் குறைய வாய்ப்பு!

ஓமன், குவைத் நாடுகளுக்கு ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் தொடக்கம்!

பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK




