FOLLOW US

ON GOOGLE DISCOVER

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 10 மசோதாக்கள் நிறைவேற்றம்! எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!

சென்னையில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது பற்றி....

News image

முதலீட்டாளர்கள் மாநாடு - DIPR

Updated On :13 ஆகஸ்ட் 2026, 11:29 am IST

சென்னையில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஆக. 13) தொடக்கிவைத்தார்.

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்.

ரூ. 67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக அரசு பதவியேற்ற 100 நாளில் ஒரு லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஒன்றிணையும் முக்கிய தளமாக இம்மாநாடு அமையவுள்ளது என ஏற்கனவே தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா பதிவிட்டிருந்தார்.

தமிழ்நாட்டின் மீது உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, ஒவ்வொரு முதலீட்டையும் மக்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாற்றும் நமது பயணத்தில், ‘வெற்றி தமிழ்நாடு 2026’ ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் கூறியிருத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The TVK government first investors conference has begun in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.