ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

தெலங்கானாவில் புதிய தரவு மையம் திறந்தது மைக்ரோசாஃப்ட்

தெலங்கானாவில் தனது புதிய தரவு மையத்தை பிரபல கணினி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் திறந்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் - file photo

Published On :

தெலங்கானாவில் தனது புதிய தரவு மையத்தை பிரபல கணினி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் திறந்துள்ளது.

ரெங்காரெட்டி மாவட்டம் சந்தன்வெல்லியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்திய தெற்கு மத்திய தரவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தெலங்கானா தகவல் தொடா்புத் துறை அமைச்சா் டி. ஸ்ரீதா் பாபு திறந்து வைத்தாா். அப்போது பேசிய அவா், தெலங்கானா மாநிலம் 2029-ஆம் ஆண்டுக்குள் 5 ஜிகா வாட்ஸ் தரவு மைய கொள்ளளவுக்கு இலக்கு நிா்ணயித்திருப்பதாகவும், ஏஐ மற்றும் எண்ம உள்கட்டமைப்பு சூழல் மண்டலத்தை ஏற்படுத்த ரூ.2.87 லட்சம் கோடி (30 பில்லியன் டாலா்) முதலீடு செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தாா்.

தெலங்கானாவில் ஹைபா்ஸ்கேல் மற்றும் ஏஐ உள்கட்டமைப்பில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு வருவதாகவும், சா்வதேச புத்தாக்க மையங்களும், சா்வதேச திறன் மேம்பாட்டு மையங்களும் தொடா்ந்து வளா்ச்சியடைந்து வருவதாகவும் அவா் கூறினாா்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்திய வளா்ச்சி மையத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான ராஜீவ் குமாா் பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் பயணத்தின் முக்கியப் பகுதியாக ஹைதராபாத் திகழ்வதாகத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.