
கேரள வணிக நிறுவனத்தில் மின்தூக்கி அறுந்து விழுந்ததில் ஒருவர் பலி!
மூவாட்டுப்புழா வணிக நிறுவன கிடங்கில் மின்தூக்கி சரிந்து விழுந்தது பற்றி..

DIN
கேரள மாநிலம், எர்ணாகுளத்தின் மூவாட்டுப்புழாவில் உள்ள வணிக நிறுவனத்தின் கிடங்கில் மின்தூக்கி அறுந்து விழுந்ததில் 19 வயதுடைய தொழிலாளி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.
உயிரிழந்தவர் மூவாட்டுப்புழா அருகிலுள்ள பெரிங்காழாவைச் சேர்ந்த அக்ஷய் கிருஷ்ணன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெல்லோர்குன்னத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மூன்று மாடி நகராட்சி கட்டடத்தில் அமைந்துள்ள ஒரு கடையின் கிடங்கில் திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அக்கடையின் ஊழியரான அக்ஷய், மேல் தளங்களில் வைக்கப்பட்டிருந்த சில பொருள்களை எடுப்பதற்காகக் கிடங்கிற்குச் சென்றிருந்தபோது மின்தூக்கி சரிந்து விழுந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
பின்னர், அவர் கிடங்கின் தரையில் கிடந்த கண்டெடுக்கப்பட்ட நிலையில், உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் தொடுபுழாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட சிசிடிவி காட்சிகளில், மின்தூக்கி கீழே விழுவதும், அக்ஷய் தூக்கி வீசப்பட்டு தரையில் விழுவதும் பதிவாகியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




